நவ., 1ல், குரூப் 2, 2ஏ தேர்வு 15,049 தேர்வர் எழுத ஏற்பாடு

ஈரோடு: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு வரும் நவ., 1 காலை நடக்க உள்ளது.

ஈரோடு வட்டத்தில், 27 தேர்வு மையங்களில், 7,822 தேர்வர்கள், பவானி வட்டத்தில், 13 மையங்களில், 3,652 பேர், கோபி வட்டத்தில், 12 தேர்வு மையங்களில், 3,575 பேர் என, 52 மையங்களில், 15,049 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வு நவ., 1 காலை, 9:30 முதல் மதியம், 12:30 மணி வரை நடக்க உள்ளது. அன்று காலை, 8:30 முதல், 9:00 மணிக்குள் தேர்வு கூடத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். 9:00 மணிக்கு தேர்வுக்கூட நுழைவு வாயில் மூடப்படும். அதன் பின் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு பணிகளை கண்காணிக்க, 12 நடமாடும் குழுக்கள், 52 ஆய்வு அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலையில், 3 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் வசதிக்காக பஸ், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement