ஓய்வூதியர் மீதான விசாரணையை முடிக்க வலியுறுத்தி போராட்டம்

ஈரோடு: ஈரோடு காளை மாட்டு சிலை அருகே, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோட்ட செயலர் பாவேசு வரவேற்றார். நிர்வாகிகள் முருகேசன், ராஜேந்திரன், சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், வெங்கடாசலம் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள், லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை, துறை ரீதியான விசாரைணகளை தாமதமின்றி அரசு நிர்ணயித்த காலவரையறைக்குள் முடிக்க வேண்டும். தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தோர், ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டாலும், ஓய்வூதிய பலன் பெறுவதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும்.
சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோட்பாடு அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கு, உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisement