பள்ளிகளில் கலன் மாதிரி வைத்து டெங்கு விழிப்புணர்வு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி சார்பில், செங்கோடம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மூன்றாவது மண்டல சுகாதார ஆய்வாளர் அருண்குமார் தலைமை வகித்தார். அப்போது, வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்கக்கூடிய தேங்காய் மூடி, பிளாஸ்டிக் டப்பா, பழைய டயர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் முறை, டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துவது, காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகிலுள்ள மருத்துவனைக்கு உடனடியாக சென்று பரிசோதனை செய்து கொள்வது என்பன போன்ற விபரங்கள் குறித்து மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது.
மேலும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் கலன்களின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலாக்கம் குறித்தும், குப்பையை நான்கு வகையாக தரம் பிரித்து கொடுப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர். மாநகராட்சி அதிகாரிகள்,
ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
வன்முறையில் ஈடுபட்டால் அரசு வேலை கிடையாது; விதிகளை கடுமையாக்கியது உ.பி., அரசு
-
கத்தார் செல்லும் விமானத்தில் கோளாறு; கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து
-
தேர்தலில் தோற்றுப் போனவர்களை நாங்கள் ஏன் பழி வாங்க வேண்டும்; அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி
-
உக்ரைன் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 13 பேர் பலி
-
நெடுஞ்சாலைகளில் 120 கிமீ வேகத்தில் பயணம்: அபராதம் கூடாது என நிதின் கட்கரி அறிவுரை
-
பாரா ஆசிய விளையாட்டில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்