எரிபொருள் விலை உயர்வால் உலகை சுற்றி வரும் சொகுசு கப்பல் பயணம் பாதியிலேயே நிறுத்தம்
புனோம்பென்: உலகம் முழுதும், 150 நாடுகளை கடல் வழியாக சுற்றி பார்க்கும் கனவோடு இருந்தவர்களை ஏற்றிச் சென்ற பிரபல 'வில்லா வி ஒடிசி' குடியிருப்பு சொகுசு கப்பலின் பயணம், எரிபொருள் விலை உயர்வு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமான சொகுசுப் பயணக் கப்பல்கள் போன்று வார விடுமுறைக்காக இல்லாமல், கடலிலேயே நிரந்தரமாக வசிக்கும் புதிய சிந்தனையுடன் 'வில்லா வி ஒடிசி' என்ற சொகுசுக் கப்பல், அமெரிக்காவைச் சேர்ந்த 'வில்லா வீ ரெசிடென்சஸ்' என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
இக்கப்பலில் கேளிக்கை விடுதிகள், நீச்சல் குளங்கள், உணவகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
வில்லா வி ஒடிசி கப்பலில் 1.14 கோடி ரூபாய் முதல் 4.18 கோடி ரூபாய் வரை செலுத்தி, அறைகளை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். வாடகைக்கும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்தக் கப்பல், வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் இருந்து, 15 நாடுகளைச் சேர்ந்த 200 பயணியர் மற்றும் 156 பணியாளர்களும், 2024 அக்டோபரில் புறப்பட்டது. இக்கப்பல், மூன்றரை ஆண்டுகளில், 150 நாடுகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அமெரிக்கா - ஈரான் போரால், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக பாதியிலேயே இந்த கப்பல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் இக்கப்பலில் வசித்து வந்த, 200 பயணியர் தென்மேற்கு ஆசிய நாடான கம்போடியாவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
கம்போடியாவின் சிகானுக்வில் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பல் எப்போது மீண்டும் தன் பயணத்தை தொடங்கும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
பைக்ல ஊரே சுத்த முடியல இவ்வளவு விலைவாசியில கப்பல்ல நாடு சுத்துறாங்களாமேலும்
-
'அர்னாப்' புயலால் ஒடிஷாவில் கனமழை: தனித் தீவுகளாக மாறியது 300 கிராமங்கள்
-
ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்
-
ஜனநாயகத்துக்கு ஆபத்து; நக்சல் வீடியோ தொடர்பாக நடிகர் நசிருதீன் ஷாவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
-
வழக்கை ரத்து செய்யக்கோரிய மகேஷ் மனு நவம்பர் 10க்கு விசாரணை தள்ளிவைப்பு
-
ஆய்வு கூட்டங்களுக்கு வரும் பெண் எம்.எல்.ஏ.,வின் கைக்குழந்தையை கவனிப்பதா அரசு ஊழியர் வேலை?
-
'டேப்' ஒட்டிய விமான ஜன்னல்; பாதுகாப்பில் அலட்சியத்தை கண்டு ஸ்பைஸ்ஜெட் விமான பயணி ஆவேசம்