ஆட்டோக்களில் புதிய கட்டணம் அமல் 6 மாதத்தில் மீட்டர்களை திருத்த முடிவு
சென்னை: தமிழகத்தில், ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம், நேற்று முதல் அமலானது. ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள, 4.20 லட்சம் மீட்டர்களை, அடுத்த ஆறு மாங்களில் திருத்தி அமைக்க, போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, கடந்த 13 ஆண்டுகளுக்கு பின், புதிய கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, முதல் 1.8 கி.மீ., துாரத்திற்கு, குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாய், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும், 25 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஆட்டோ தொழிற்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அத்துடன் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.
* அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம்:
ஆட்டோ மீட்டர் கட்டணம் அறிவிப்புக்கு முன், தொழிற்சங்கங்களிடம் பேசி இருக்கலாம். அரசு ஆட்டோ செயலியை தொடங்க வேண்டும். முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். பண்டிகை காலங்களில், நல வாரியத்தில் இருந்து, ஓட்டுனர்களுக்கு 5,000 ரூபாய் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்க செயல் தலைவர் ஜாஹிர் ஹூசேன்:
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்திய, தமிழக போக்குவரத்து துறைக்கு நன்றி. ஆட்டோ மீட்டர் திருத்தம் செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
* தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள்:
ஆட்டோ மீட்டர் புதிய கட்டணம், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை ஆட்டோ ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டும். தங்கள் மீட்டர்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருத்த வேண்டும். அதுவரை, போக்குவரத்து இணையதளத்தில் உள்ள, கட்டண அட்டையை பதிவிறக்கம் செய்து, பொதுமக்கள் பார்வைக்காக, வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.
ஆட்டோக்களில் பார்வைக்கு வைத்துள்ள கட்டண அட்டையில் உள்ள கியூ.ஆர்., குறியீடை, 'ஸ்கேன்' செய்து, கட்டண அட்டையில், உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி கொள்ளலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால், பொதுமக்கள் 1800 425 5430 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தமிழகம் முழுதும் 4.20 லட்சம் ஆட்டோ மீட்டர்களில், திருத்தம் செய்ய வேண்டி உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (28)
பைரவன் - ,
29 அக்,2026 - 20:03 Report Abuse
மீட்டர்களை ஏன் திருத்த வேண்டும்? யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆத்து கிறார்கள்? 0
0
Reply
மதுரை வாசு - மதுரை மாநகர்,இந்தியா
29 அக்,2026 - 15:56 Report Abuse
சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திலி ருந்து எக்மோர் போக கூசாமல் குறைந்தபட்சம் ₹200 கேட்கிறாங்க. இவனுங்க கஷ்டப்படும் ஏழைகாலாம்.
அந்நியன் மாதிரி ஒருத்தன் வந்து இவங்களை எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து எடுக்கணும். 0
0
Reply
மதுரை வாசு - மதுரை மாநகர்,இந்தியா
29 அக்,2026 - 15:49 Report Abuse
எ/சி டாக்சிக்குகூட கி.மீ. ரேட் ₹௨௫கிடையாது. நம்முரு ஆட்டோகாரனுங்களுக்கு கொளுத்த லாபம். 0
0
Reply
ஆரூர் ரங் - ,
29 அக்,2026 - 12:16 Report Abuse
ப்ராக்டிகலா நடப்பது வேறு. தனியாளாக ஏறினால் ஒரு ரேட். பெண்கள் குழந்தைகளுடன் ஏறினால் கூடுதல் ரேட்.. பேருந்தில் ஏற முடியாத இயலாத முதியவர்கள் கேட்டால் இன்னும் அதிக கட்டணம். இதுக்கு எதற்கு மீட்டர் மண்ணாங்கட்டி?. 0
0
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
29 அக்,2026 - 13:09Report Abuse
மீட்டர் மண்ணாங்கட்டி ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த ஆட்டோவை முக்கிய பிரச்சினையா எடுத்து நடைமுறையில் ஒரு சல்லிக்காசுக்கு பிரயோசனமில்லாத கட்டண உயர்வுக்கு அரசாணை போடறாங்களே அந்த மண்ணாங்கட்டியை என்ன சொல்றது? 0
0
Reply
A.Muralidaran - Chennai,இந்தியா
29 அக்,2026 - 10:57 Report Abuse
இப்போது 80 அல்லது 100 ரூபாய் குறைந்தகட்டணம் பெறுகிறார்கள். அதை 50 ரூபாயாக வாங்குவார்களா? மீட்டர் படி கட்டணம் வாங்குவார்களா? அந்த மீட்டரும் அரசு காலிபரசேன் செய்ததா என்பதை அரசு ஊழியர்கள் உறுதி செய்வார்களா 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
29 அக்,2026 - 10:39 Report Abuse
மக்கள் மெல்ல மெல்ல ஆட்டோக்களைப் புறக்கணித்தால் நல்லது 0
0
Reply
KavikumarRam - Indian,இந்தியா
29 அக்,2026 - 10:30 Report Abuse
எப்படியும் ஒரு ஆட்டோக்காரரும் மீட்டர் காசு வாங்கப்போவதில்லை. சரியான மீட்டர் சார்ஜ் வசூலித்தால் மக்களும் கவலையில்லாமல் தொடர்ந்து ஆட்டோ பயன்படுத்துவார்கள். ஆட்டோக்காரர்களுக்கும் அது நல்ல பலனை தரும். ஆனால் எடுத்த உடனே 4 கிலோமீட்டருக்கு 300 ரூபாய்னு தான் பேரமே ஆரம்பிக்கிறார்கள். பேரம் பேசுவதற்குள் உயிர் போய்விடுகிறது. எதோ ஓலா, உபர், ரேபிடோ இருக்கிறதுனால ஓரளவுக்கு சரியான கட்டணத்தில் ஆட்டோவில் பயணிக்க முடிகிறது. இதில் இணையாத ஆட்டோ டிரைவர்கள் திமிர் இன்னும்கூட குறையாமல் எல்லை மீறி தான் கொள்ளையடிக்கிறார்கள். 0
0
Reply
Nagarajan D - Coimbatore,இந்தியா
29 அக்,2026 - 10:09 Report Abuse
சரியான முடிவு... எந்த ஆட்டோ காரரும் மீட்டர் போடாமல் ஓட்டக்கூடாது... மீட்டர் கட்டணத்திற்கு மேல் ஒரு ரூபாய் கேட்டாலும் ஆட்டோ உறுமும் ரத்து அந்த ஆட்டோ உரிமையாளர் பெயரில் அதற்கப்பறம் என்றுமே ஆட்டோ உரிமம் பதியக்கூடாது. இந்த நிபந்தனையை ஏற்றால் கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்ளலாம்... 0
0
Reply
visu - tamilnadu,இந்தியா
29 அக்,2026 - 09:09 Report Abuse
மீட்டர் போடுவதை விட எல்லா ஆட்டோ வும் ஆப் மூலம் மட்டும் இயங்கவேண்டும் என்று ஆட்டம் போட்டால் போதும் . தொழில் நுட்பம் முன்னேறிவிட்டது .மீட்டர் அமைக்கும் செலவு மிச்சம் .முறைகேடு செய்யமுடியாது .ஆட்டோ FC , ஓட்டுநர் உரிமம் , பெண்கள் பாதுகாப்பு எவ்வளவு தூ ரம் கட்டணம் எல்லாம் ஆப் காட்டிவிடும் வேலை சுலபம் எல்லாம் அரசு கட்டுப்பாட்டில் வந்து விடும் சவாரி வர மறுத்தல் அபராதம் கூட போ டலாம் 0
0
Reply
Nandakumar Naidu - ,
29 அக்,2026 - 08:47 Report Abuse
ஒரே அடியாக 100 சதவிகித உயர்வா? முதலிலேயே அவர்கள் மீட்டர் போடாமல் அதிகமாகத்தான் வாங்கிக்கொண்டிருந்தார்கள். இப்போது இன்னும் மோசமாகப்போகிறது நிலைமை. 0
0
Reply
மேலும் 17 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement