போலீசாக நடித்து பெயின்டரிடம் பணம் பறித்த ரவுடி கைது
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர் மிதுர்சன், 27; பெயின்டர். கடந்த, 26ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, தன் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில், கெலவரப்பள்ளி அணை பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்தார்.
அப்போது அங்கு டாடா சுமோ காரில் வந்த, 4 பேர் கும்பல், தங்களை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் எனக்கூறி, 'நீ கஞ்சா விற்பதாக புகார் வந்துள்ளது. விசாரிக்க வேண்டும்' என, மிதுர்சன் கண்களை கட்டி,
சுமோ காரில் கடத்தியது.
மிதுர்சன் பைக்கை காரில் வந்த ஒருவர் எடுத்து சென்றார். ஒரு ரகசிய அறையில் அவரை அடைத்து வைத்த கும்பல், அவரின் மனைவி கவுசல்யாவிற்கு போன் செய்து, '3 லட்சம் ரூபாய் தர வேண்டும். இல்லாவிட்டால், உன் கணவர் மீது கஞ்சா வழக்குப்
பதிவு செய்து விடுவோம்' என, மிரட்டியது. 'அவ்வளவு பணம் இல்லை' என, கவுசல்யா கூறியுள்ளார். அதனால், ஓசூர் குமுதேப்பள்ளிக்கு, மிதுர்சனை காரில் கடத்திய கும்பல், கியூ.ஆர்., கோடு மூலமாக மிதுர்சன் வங்கி கணக்கிலிருந்து, 20,000 ரூபாய், அவரிடமிருந்த, 3,500 ரூபாயை பறித்தது.
பின்னர் அவரை, அதே இடத்தில் இறக்கி விட்டு, பைக்கை கொடுத்த கும்பல், 'நாளை, 30,000 ரூபாய் தர வேண்டும். நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் சும்மா விட மாட்டோம்' என மிரட்டி சென்றது. வீட்டிற்கு வந்த மிதுர்சன், நடந்ததை மனைவியிடம் கூறியதுடன், நல்லுார் போலீசிலும் புகார் செய்தார்.
விசாரணையில், ஓசூர் அலசநத்தம் நரசிம்மா காலனியில் வசிக்கும், உத்தனப்பள்ளி அருகே கனகசத்திரம் கிராமத்தை சேர்ந்த மல்லேஷ் ரவி, 44, தரப்பினர், மிதுர்சனை கடத்தி சென்று பணம் பறித்தது தெரிந்தது. மல்லேஷ் ரவி மீது, இரு கொலை, ஒரு கொலை முயற்சி, 5 ஆள் கடத்தல், 6 வழிப்பறி என, 20க்கும் மேற்பட்ட வழக்கு கள் உள்ளன. போலீசாரின் குற்ற சரித்திர பதிவேட்டில், இவரது பெயர் உள்ளது. ரவுடியான மல்லேஷ் ரவியை, நேற்று கைது செய்த போலீசார், மற்ற மூவரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
கழிவறையில் மாணவர் மீது தாக்கு வலைதளங்களில் வீடியோ வைரல்
-
40 கிலோ குட்காவுடன் 2 பேர் கைது ரூ.1.25 லட்சம், கார் பறிமுதல்
-
பஸ் சக்கரத்தில் சிக்கி ஜோதிடர் பரிதாப பலி
-
அதிகாரிகளும், மக்களும் கடமையுணர்வுடன் செயல்பட்டால் மாநிலம் முழு வளர்ச்சி அடையும்; அமைச்சர் வெங்கடரமணன்
-
குழந்தை விற்ற வழக்கில் மேலும் ஒருவ் கைது
-
ஆன்லைன் லாட்டரி விற்பனை 3 பேர் கைது