கழிவறையில் மாணவர் மீது தாக்கு வலைதளங்களில் வீடியோ வைரல்
விருத்தாசலம்: தனியார் பள்ளி கழிவறையில் மாணவர் ஒருவரை 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் – மங்கலம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியில், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர் ஒருவரை, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து, கழிவறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
மாணவர்களே இந்த காட்சியை வீடியோவாக எடுத்து, இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது தெரிந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவரின் பெற்றோர், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளி, கல்லுாரிகளில் இதுபோன்ற வன்முறைகளை துவக்கத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
தகவலறிந்த மங்கலம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாணவரை, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
மயான எரியூட்டும் கட்டடம் சேதம்: சீரமைக்க கோரிக்கை
-
மாவட்டத்தில் 300 விலையில்லா பசு மாடுகள் வழங்க ஏற்பாடு
-
கூடலுார் வழியாக ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு! குற்ற புலனாய்வு அலுவலகம் திறக்கப்படுமா?
-
வாடகை செலுத்தாமல் ‘ டிமிக்கி’ 19 கடைக்கு அதிரடியாக‘ சீல்’
-
இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்: இந்திய அணி 191 ரன்
-
திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு