மகேஷ் கூட்டாளி சண்முகபிரியா வீடுகளில் போலீசார் திடீர் சோதனை
சென்னை: தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தலைமறைவாக உள்ள, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமாருடன் கூட்டு சேர்ந்து, பண மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, சென்னை தொழில் அதிபர் சண்முகபிரியா, 52, என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தொடர்பாக, முதலில் தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் அரசகுமார், 58, கைது செய்யப்பட்டார். பின், அவரது கூட்டாளிகள் இருவர் கைதாகினர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடிக்கு மூளையாக செயல்பட்டது, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார், 48, மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், 48, என்பதும் தெரியவந்தது.
இவர்களில், அன்பில் மகேஷ் இரு தினங்களுக்கு முன், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முத்துகுமார் தலைமறைவாக உள்ளார்.
இதற்கிடையே, அன்பில் மகேஷ், அவரது உதவியாளர் பிரகாஷ், அருண்பிரகாஷ், வாலாடி கார்த்திக் மற்றும் முத்துகுமாரின் உறவினர்கள் சரவணன், ரமேஷ் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தி, பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இவற்றை ஆய்வு செய்தபோது, சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சண்முகபிரியா என்பவர், அன்பில் மகேஷ் மற்றும் முத்துகுமார் ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்ததும், முத்துகுமார் வாயிலாக இவருக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதும் போலீஸ் விசாரணையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சண்முகபிரியா குறித்து, போலீசார் விசாரித்தனர். அவர் ஆயத்த ஆடைகள் மொத்த விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பெருங்குடியில் உள்ள, ராம் ராகஸ்ரீ வில்லாஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சண்முகபிரியாவின் வீட்டில், நேற்று நான்கு மணி நேரம், போலீசார் சோதனை நடத்தினர்.
அதேபோல, நீலாங்கரை, அபிராமபுரம் பசுமை வழி சாலையில் உள்ள, அவரது வீடுகளிலும் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமாரின் முன்ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
@block_P@
தனியார் பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவதாக, 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் கைதான, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிறப்பு நீதிமன்றத்தில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று மனு தாக்கல் செய்தனர்.block_P
பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பதை திமுக காரன் பங்களா ஒதுக்கீடு என்று தவறாக புரிந்து கொண்டான்.
என்ன தொழிலுக்கு அதிபராக இருக்கும்?
அதான் போட்டிருக்ககாங்களே. ரெடிமேட் டிரெஸ் ஹோல்சேல் பிசினஸ்னு. அதாவது மாந்தர்களின் மானத்தை காக்கும் உடை அல்லது ஆடை.
ஆட்சி மாற்றம் ஏற்படும் போது இதை போன்ற கூட்டாளி வை...
க..... எல்லாம் கதற போவது உறுதி
கூட்டாளி என்று மொட்டையாக சொன்னால் எப்படி
நாகரீகம் கருதி அவ்வளவு தான் போட முடியும் புண்ணியம்.
பட்ட ஜிலேபி. மகேஷ் காலி
சட்டப்படி உழைக்கும் நல்லவர்களுக்குத்தான் இங்கு வீடில்லை.சட்டத்தை மீறி தவறு செய்பவர்களுக்கு இங்கு எத்தனை வீடுகள்?மேலும்
-
'டேப்' ஒட்டிய விமான ஜன்னல்; பாதுகாப்பில் அலட்சியத்தை கண்டு ஸ்பைஸ்ஜெட் விமான பயணி ஆவேசம்
-
நாக்பூரில் வென்று கணக்கை துவக்கியது காங்கிரஸ்: கர்நாடகா, உ.பி., மேல்சபை தேர்தலில் பா.ஜ., ஆதிக்கம்
-
சிறப்பாக பணியாற்றிய ஊழியருக்கு சொகுசு கார் பரிசு வழங்கிய துபாய் நிறுவனம்
-
வன்முறையில் ஈடுபட்டால் அரசு வேலை கிடையாது; விதிகளை கடுமையாக்கியது உ.பி., அரசு
-
கத்தார் செல்லும் விமானத்தில் கோளாறு; கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து
-
தேர்தலில் தோற்றுப் போனவர்களை நாங்கள் ஏன் பழி வாங்க வேண்டும்; அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி