அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா
தர்மபுரி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், பல்வேறு
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். மாநில தலைவர் அண்ணா குபேரன், துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் தெய்வானை, உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், தமிழக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான விதிமுறைகளை உடன் வெளியிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, ஊழியர்கள் அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்கி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமன ஒதுக்கீட்டை மீண்டும், 25 சதவீதம் உயர்த்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த நியமனங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக் கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும்
-
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்
-
கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
-
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்; குஜராத் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி... அணிகளின் முழு விபரம்
-
திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு
-
ஆசம் கான் பல்கலையின் ரூ.1,170 கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை