பைக் - பஸ் மோதல் முதியவர் உயிரிழப்பு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார், 42, கூலித்தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்த நீதி, 66, என்பவரும், கடந்த, 26ம் தேதி இரவு, 7:30 மணிக்கு பஜாஜ் பல்சர் பைக்கில் சூரநத்தம் சென்று விட்டு, இரவு, 7:30 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். பைக்கை முத்துக்குமார் ஓட்டிச் சென்றார்.
சிட்லிங் - கோட்டப்பட்டி சாலையில், தனியார் பள்ளி அருகில் வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த நீதி, முத்துக்குமார் ஆகிய இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, நீதி உயிரிழந்தார். புகார் படி கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரேஷன் கார்டுக்கு ரூ.6,000 லஞ்சம் உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை
-
5 ஆண்டுக்கு முன் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு அழைப்பு
-
கோர்ட் உத்தரவுகளை மாற்ற நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
'நெல் பயிருக்கும் சொட்டு நீர் பாசனம்'
-
நோட்டர் டேம் ஆப் ஹோலிகிராஸில் ஏ.ஐ., ரோபோடிக் ஆய்வகம் திறப்பு
-
மண்ணுடன் லாரி பறிமுதல் கடத்தியவர் தப்பி ஓட்டம்
Advertisement
Advertisement