இளம்பெண்ணிடம் தவறாக நடந்த கடைக்காரர் போக்சோவில் கைது
ஓசூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சின்ன கொள்ளியூரை சேர்ந்தவர் கோவிந்தன், 45. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆனந்த் நகரில் தங்கி, தர்கா அருகே டிபன் கடை நடத்தி வருகிறார்.
கடந்த, 9ம் தேதி அப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார். அங்கு பொறுப்பாளராக உள்ள பெண், வீட்டிற்கு சாப்பிட சென்றிருந்தார். அதனால், அவரது மகளான, 16 வயது இளம்பெண் மட்டும் அங்கிருந்தார்.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கோவிந்தன், அவரிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டார். இதையறிந்த இளம்பெண்ணின் தாய் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில், டிபன் கடைக்காரர் கோவிந்தனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் தோற்றுப் போனவர்களை நாங்கள் ஏன் பழி வாங்க வேண்டும்; அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி
-
உக்ரைன் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 13 பேர் பலி
-
நெடுஞ்சாலைகளில் 120 கிமீ வேகத்தில் பயணம்: அபராதம் கூடாது என நிதின் கட்கரி அறிவுரை
-
பாரா ஆசிய விளையாட்டில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்
-
டிஜிட்டல் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
-
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: சீமான்
Advertisement
Advertisement