காலபைரவர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த செங்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்கல்மேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள வைரநாதர் என்கிற காலபைரவர், ராஜகணபதி கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
கும்பாபிஷேக விழா, கடந்த திங்கட்கிழமை கொடியேற்றம் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் விமான கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு கால
பைரவர் அருள்பாலித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement