டில்லிக்கு அழைக்கும் ராகுல்; ஆர்வம் இல்லாத காங்கிரசார்
- நமது நிருபர் -
டில்லியில், நவ.,1ல் நடக்கும் காங்., பேரணியில் பங்கேற்பதில், கட்சியின் தமிழக நிர்வாகிகளிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக்கோரி, காங்கிரஸ் தலைமையிலான 'இண்டி' கூட்டணி சார்பாக, நவ.1ல், டில்லியில் பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும் என பேரணியை வழி நடத்தவுள்ள லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எதிர்பார்க்கிறார்.
இதனால், மாநிலம் வாரியாக, காங்., நிர்வாகிகளை, டில்லிக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால், டில்லிக்கு அழைத்து செல்வதற்கான பயணச் செலவை ஏற்பது யார் என்ற சர்ச்சையில், தமிழக காங்., நிர்வாகிகள் ஆர்வமின்றி உள்ளனர்.
காங்., மாவட்ட தலைவர்கள் கூறியதாவது: டில்லிக்கு சென்று வர, நான்கு நாட்கள் ஆகும்; பயணம் செலவு மற்றும் சாப்பாடு, தங்கும் செலவை யார் ஏற்பது என்பதில் குழப்பம் உள்ளது. சென்னையில் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட மாவட்ட தலைவர்களுக்குள், இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழகத்தில், காங்கிரசுக்கு 10 எம்.பி.,க்கள், 2 அமைச்சர்கள், 3 எம்.எல்.ஏ.,க்கள், 2 ராஜ்யசபா எம்.பி.,க்கள் உள்ளனர். மாவட்டத்திற்கு, தலா 50 நிர்வாகிகளை கூட, இவர்கள் செலவில் அழைத்துச் செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. கட்சியும் கவலைப்படுவதாக தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மனசாட்சி, கொஞ்சமாவது சிந்திக்கும் திறன் கொண்ட எந்த தொண்டனும் போக விரும்ப மாட்டான்.வேண்டுமானால் கரப்பான்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.
இவரை நம்பி யாரும் போவதாக தெரியவில்லை. இவர் ஒரு வெளிநாட்டு கைக்கூலி என்று தெரிந்துவிட்டது.
சென்னையில் போராட்டம் நடந்தாலே வருவதற்காகு தெண்டர்கள் இல்லை. ராகுல் டெல்லியில் அடிவாங்க அழைக்கிறார்.
சத்தியமூர்த்தி பவனுக்கே நாங்க அடிதடிக்கு மட்டும்தான் போவோம். இல்லன்னா எட்டிக் கூட பார்க்க மாட்டோம்.இதுல டெல்லிக்கு எங்கே போறது?
டில்லியுலும் அடிதடி செய்யலாம் வேட்டி சட்டையை கிழித்துக்கோண்டு பைத்தியமாய அலையலாம். தடுக்க யார் இருக்குறார்கள? சண்டை போடுவது, வெண்டையாய திட்டுவது சட்டை வேட்டி கிழிப்பது எல்லாம் ஜனநாயக உரிமை அல்லவா.
1ஆம் தேதி ஊர்வலம் மிக பெரிய வெற்றி
கூடிய சீக்கிரம் ராகுல் பி எம் ஆகி விடுவார்
இறுதி ஊர்வலம் காங்கிரசுக்கு
31 ஆம் தேதி வியட்நாம்/ தாய்லாந்துக்கு ஓடிடு. Problem solved
அப்போது பேரணி பூட்ட கேஸா.மேலும்
-
முன்னாள் தி.மு.க.,- எம்.எல்.ஏ., வீடு உட்பட 2 இடத்தில் சோதனை
-
ஆட்டோக்களில் ஜிபிஎஸ் மீட்டர் பொருத்தும் திட்டம் கைவிடப்பட்டதால் பயணியர் அதிருப்தி
-
வசந்த நகர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் அவதி
-
மதுபானங்களை பதுக்கி விற்ற வாலிபர் கைது
-
மின்கம்பத்தில் மோதி கட்டட மேஸ்திரி பலி
-
மாணவ, மாணவியருக்கு உலக சிக்கன நாள் போட்டி