2 இளம்பெண் மாயம்
தர்மபுரி: தர்மபுரி அருகேவுள்ள பிடமனேரி நெல்லிநகரை சேர்ந்தவர் சிந்து, 24. இவர் பாப்பாரப்பட்டியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கணவருடனான கருத்து வேறுபாடால், சிந்து கடந்த, 10 மாதமாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சேலத்தில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்கு சென்று வந்தவர் கடந்த, 26ம் தேதி மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர், 18 வயது இளம்பெண். இவர் நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., பேஷன் டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாயமானார். பெற்றோர் புகார்படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement