சிறுமி கடத்தல்: ஒருவர் கைது
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி கடந்த, 25ம் தேதி கடைக்கு சென்றபோது, கடத்தப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணை மேற்கொண்ட போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தை சேர்ந்த சிவகுமார், 50, என்பவர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக நேற்று அவரை கைது செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட அவரது மகன் வேலன், 22, மற்றும் சிறுமியை அதியமான்கோட்டை போலீசார் தேடி
வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement