முதல்வர் கோப்பையில் தேனி 11வது இடம்
தேனி: முதல்வர் கோப்பை போட்டிகளில் தேனி மாவட்டம் 8 தங்கம் உள்ளிட்ட 17 பதக்கங்களுடன் 11ம் இடத்தை பிடித்துள்ளது.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி, பொதுமக்கள், மாற்றுத்திறானளிகள், அரசு அலுவலர்கள் ஆகிய பிரிவில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட்டது. அனைத்து போட்டிகளும் மாவட்ட அளவில் நடத்தப்பட்டும், ஒரு சில போட்டிகள் மண்டல அளவில் நடத்தப்பட்டது. வெற்றிபெற்றவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். மாநில அளவில் தேனியை சேர்ந்த வீரர்கள் 8 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 17 பதக்கம் வென்றனர். மாநில அளவில் தேனி 11ம் இடத்தை பிடித்தது. கடந்தாண்டு 16ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிட தக்கது.
தங்கம் வென்றோர்:பள்ளி மாணவர்கள் பிரிவில் தர்னேஷ் 2 தங்கம் ( வட்டு எறிதல், குண்டு எறிதல்), ஜூடோ வில் யோகிசர்மா, சிலம்பத்தில் ஹரிணி ஸ்ரீ, அருண்பாண்டி, ராஜபாண்டி, கல்லுாரி மாணவர் பாண்டீஸ்வரன், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் குருபாஸ்கரசேதுபதி குண்டு எறிதலில் தஙகம் வென்றுள்ளனர்.
மேலும்
-
விபத்து காப்பீடு வழங்கல்
-
பாண்டியாறு – மோயாறு இணைப்பு திட்டம் கேரள முதல்வரிடம் பேச விஜய்க்கு கோரிக்கை
-
இலவச பயிற்சி
-
செங்கல் ஏற்றி வந்த லாரி ஊருணியில் கவிழ்ந்தது 3 பேர் காயம்
-
நோயாளியுடன் பேசியபடி மூளை கட்டி அகற்றம்பி.எஸ்.ஜி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
-
கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை: தொழிலாளர் துறை எச்சரிக்கை