செங்கல் ஏற்றி வந்த லாரி ஊருணியில் கவிழ்ந்தது 3 பேர் காயம்
காரியாபட்டி: மாந்தோப்பு ஊருணியில் மண் சரிவு ஏற்பட்டு செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் டிரைவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் எம். கல்லுப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் மூர்த்தி. லாரியில் செங்கல் ஏற்றி காரியாபட்டி அச்சங்குளத்திற்கு வந்தனர். செங்கலை இறக்க உடன் 3 பேர் வந்தனர். மாந்தோப்பு ஊருணியை சுற்றி கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவர் பலம் இழந்து ஆங்காங்கே இடிந்து காணப்பட்டது. அந்த வழியாக வந்த செங்கல் ஏற்றிய லாரி மண் சரிவு ஏற்பட்டு தலைக்குப்புற ஊருணிக்குள் கவிழ்ந்தது. டிரைவர் மூர்த்தி 38, சரவணன் 35 உட்பட 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கிராமத்தினர் அவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விபத்து காப்பீடு வழங்கல்
-
பாண்டியாறு – மோயாறு இணைப்பு திட்டம் கேரள முதல்வரிடம் பேச விஜய்க்கு கோரிக்கை
-
இலவச பயிற்சி
-
முதல்வர் கோப்பையில் தேனி 11வது இடம்
-
நோயாளியுடன் பேசியபடி மூளை கட்டி அகற்றம்பி.எஸ்.ஜி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
-
கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை: தொழிலாளர் துறை எச்சரிக்கை
Advertisement
Advertisement