மின்கம்பத்தில் மோதி கட்டட மேஸ்திரி பலி

திருச்செங்கோடு:திருச்செங்கோடு, ஈரோடு சாலையில் உள்ள வரப்பாளையத்தை சேர்ந்தவர் கட்ட மேஸ்திரி சுதாகர், 43. இவர் நேற்று காலை, வரப்பாளையத்திலிருந்து திருச்செங்கோடு நோக்கி டி.வி.எஸ். எக்ஸ்.எல்., மொபட்டில், சென்று கொண்டிருந்தார்.

அப்போது நிலை தடுமாறி, முனியப்பன் கோவில் அருகே உள்ள மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். திருச்செங்கோடு ரூரலல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement