ஆதி திராவிட விவசாயிகள் தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெற நிதி ஒதுக்கீடு
நாமக்கல்:வளமிகு
வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ், 1,000 ஆதிதிராவிட
விவசாயிகளுக்கு, தட்கல் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு, 26.09 கோடி
ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டம்
மூலம், ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்தி, வேளாண்
உற்பத்தியை பெருக்கவும், வருமானத்தை உயர்த்தவும் வழிவகை
செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5 குதிரைத்திறன் மின் மோட்டாருக்கான
மின் இணைப்பு கட்டணம் ரூபாய், 2.50 லட்சத்தில், விவசாயி, 25,000
மட்டும் செலுத்தினால் போதும். மீதமுள்ள, 2.25 லட்சத்தை தாட்கோ
மானியமாக வழங்கும். அதேபோல், 7.5 குதிரைத்திறன் மின்
மோட்டாருக்கான
கட்டணம், 2.75 லட்சத்தில், பயனாளி, 27,500 ரூபாய் செலுத்த வேண்டும்;
மீதமுள்ள, 2.48 லட்சத்தை தாட்கோ ஏற்கும். மேலும், 10 குதிரைத்திறன்
மோட்டாருக்கு கட்டணம், 3 லட்சத்தில், பயனாளி ரூபாய், 30,000 ரூபாய்
செலுத்தினால் மீதி, 2.70 லட்சமும், 15 குதிரைத்திறன் மோட்டாருக்கு
கட்டணம் ரூபாய், 4 லட்சத்தில், பயனாளி, 40,000 செலுத்தினால், மீதி
ரூபாய், 3.60 லட்சத்தை தாட்கோ மானியமாக, தமிழ்நாடு மின் பகிர்மானக்
கழகத்திற்கு செலுத்தப்பட்டு விரைவு மின் இணைப்பு வழங்கப்படும்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
'தகுதியுடைய ஆதிதிராவிட விவசாயிகள், தாட்கோ இணையதளம் மூலம்
உடனடியாக
விண்ணப்பித்து பயன் பெறலாம். கூடுதல் விபரம் பெற, நாமக்கல் கலெக்டர்
அலுவலக கூடுதல் கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள, தாட்கோ அலுவலகத்தை
நேரிலோ அல்லது 04286 - 291178, மற்றும் 94450 29508 ஆகிய எண்களில்
தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்