3 ஆடுகளை கொன்ற சிறுத்தை மலை அடிவார மக்கள் அச்சம்
மேட்டூர்: கொளத்துாரில் கண்ணாமூச்சி, பாலமலை ஊராட்சிகளின் வனப்பகுதியில் ஒரு சிறுத்தை சுற்றித்திரிகிறது. நேற்று முன்தினம், மலை அடிவாரத்தில் உள்ள மூலக்கடை, கோவிலானுாரில், விவசாயி சின்னையனின் பசுங்கன்று குட்டியை கடித்து கொன்றது. இதனால், மேட்டூர் சரக வனத்துறையினர் இரு ஊராட்சிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கொசவன்கரடு அடுத்த எல்லைக்குட்டை விவசாயி சம்பத், 55, பட்டியில் புகுந்து, இரு ஆடுகளை கடித்துக்கொன்றன. அந்த ஆடுகள் மலை அடிவாரத்தில் கிடந்தன. மேலும் ஒரு ஆட்டை சிறுத்தை துாக்கிச்சென்றது.இதை அறிந்து, மேட்டூர் வனச்சரகர் செங்கோட்டையன், செட்டியூர் கால்நடை மருந்தக மருத்துவர் அண்ணாதுரை, நேற்று காலை, 11:00 மணிக்கு சம்பவ இடத்துக்கு சென்றனர். பரிசோதனைக்கு பின், இரு ஆடுகளும் புதைக்கப்பட்டன. பாலமலை அடிவாரம் சிறுத்தை சுற்றி திரிவது, அப்பகுதி விவசாயிகள், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுத்தையை பிடிக்க, மலை அடிவாரம் கூண்டுகள் வைக்க, வனத்துறையினர், உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
மேலும்
-
மீனாட்சி அம்மன் பார்த்து கொள்வார் மின்வெட்டு பற்றி பழனிசாமி ஆவேசம்
-
மினி பஸ்சில் பெண்ணை சீண்டிய கொத்தனார் கைது
-
உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விபத்து பைலட் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்
-
அமெரிக்கா உளவு பார்த்ததாக சீன பெண் மீது குற்றச்சாட்டு
-
போர், ஆயுத ஏற்றுமதிக்கு எதிர்ப்பு 22 நாடுகளில் வேலை நிறுத்தம்
-
பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ளம் அசாம், மேற்கு வங்கத்துக்கு எச்சரிக்கை