மானியத்தில் வேளாண் கருவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் வேளாண் கருவிகளை மானியத்தில் பெற விரும்பும் விவசாயிகள் உழவர் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை இணை இயக்குநர் பேபிகலா தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
வேளாண்மை இயந்திரமாக்கலுக்கான துணை இயக்கத்தின் கீழ், பவர் டில்லர், பவர் வீடர், சுழற்கலப்பை, நெல் நடவு இயந்திரம், மின்கலத் தெளிப்பான், கால்நடை தீவனம் வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட வேளாண் கருவிகள் சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல், பெரு விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
வேளாண் கருவிகளை பெற விரும்பும் விவசாயிகள் உழவர் செயலி மூலமாக தங்களது அடிப்படை ஆவணங்களின் விபரங்களை மாதம் தோறும் 1 முதல் 7ம் தேதி வரையிலும் மற்றும் 15 முதல் 21ம் தேதி வரையிலும் பதிவு செய்யலாம்.
கணினி மயமாக்கப்பட்ட குலுக்கல் முறை மூலமாக மட்டுமே தகுதியான விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கட்டாயம் விவசாய அடையாள எண் பதிவு செய்திருக்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களை அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்படும் முன் அரங்கேறிய சதித்திட்டம்; வெளியானது புதிய தகவல்
-
வங்கிக்கணக்கில் திடீரென டெபாசிட் ஆன ரூ.10 ஆயிரம் கோடி: மருந்து கடை ஊழியர் அதிர்ச்சி
-
டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில்லை என குற்றச்சாட்டு
-
கள்ளக்காதல் பிரச்னையால் முன்விரோதம் வியாபாரி கொலையில் 5 பேருக்கு ‘காப்பு’
-
2,880 திட்டப்பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்
-
போலீசாருடன் வாக்குவாதம் செய்த ப.ம.க., தலைவர் மீது வழக்கு பதிவு