வலம்புரி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் வலம்புரி விநாயகர் கோவில் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நுழைவு வாயில் மகா கும்பாபிஷேகம் இன்று (அக்.,30) நடந்தது.

அதனையொட்டி நேற்று (அக்.,29) காலை 9:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம். தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணியளவில் முதல் கால யாகசாலை பூஜைநடந்தது.

இன்று காலை 7:00 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து கலசம் புறப்பாடும் நடந்தது.

காலை 9:45 மணியளவில் வலம்புரி விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 10:00 மணியளவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நுழைவு வாயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் சாரதா ஆசிரம நிர்வாகி யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா, முன்னாள் கவுன்சிலர் வெற்றிவேல், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், அ.தி.மு.க., நிர்வாகிகள் வெங்கடேசன், திலீப் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement