மின் கம்பம் விழுந்து இறந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி

புதுச்சேரி: மின் கம்பம் விழுந்து இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு, முதல்வர் ரங்கசாமி, 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில், சேதமடைந்த அலங்கார மின் கம்பம் உடைந்து விழுந்ததில், வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் பஜல் என்பவர் உயிரிழந்தார்.

இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு, புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயலாளரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன், நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, அவரது, கோரிக்கையை ஏற்ற முதல்வர் ரங்கசாமி, இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார். தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உடனிருந்தார்.

Advertisement