என் ராஜினாமா பின்னணி பற்றி அவதுாறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்: ‘மாஜி’ மத்திய அமைச்சர் முருகன் எச்சரிக்கை
எல். முருகன் படம் வைக்கவும்
சென்னை: ‘என் ராஜினாமாவுக்கு, தவறான அர்த்தங்கள் கற்பிப்பது கண்டிக்கத்தக்கது’ என, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ராஜ்யசபா எம்.பி., மற்றும் மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்து, பிரதமர் மோடி அனுமதி பெற்று, ராஜினாமா செய்தேன். வரும் 2029 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மேம்படுத்துவதே, என் ராஜினாமாவின் நோக்கம்.
ஆனால், பல்வேறு ஊடகங்களில், தேவையற்ற இழிவான கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றனர். இவை அவதுாறானவை; வன்மையாக கண்டிக்கத்தக்கவை; எவ்வித ஆதாரமும் அற்றவை; தீய உள்நோக்கம் கொண்டவை.
கடின உழைப்பின் வழியே, நான் பெற்ற நற்பெயருக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில், என் ராஜினாமாவிற்கு, தவறான அர்த்தங்களை கற்பித்து, மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குவதே, அவர்களின் நோக்கம்.
அரசியல் உள்நோக்கத்துடன், சிலரால் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும், அவதுாறுகளும், உண்மைக்கு புறம்பானவை. இத்தகைய செயல்களை, அனுமதிக்க முடியாது. என் ராஜினாமா தொடர்பாக வெளியிட்ட, பதிவுகள் மற்றும் பிரசுரங்களை உடனடியாக நீக்க வேண்டும்.
என் நற்பெயருக்கும், மதிப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கருத்து வெளியிட்டவர்கள், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், என் மீது இழிவான பிரசாரங்களை பரப்புவோருக்கு எதிராக, குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில், உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
புற்றுநோய் சிகிச்சைக்கான 543 மருந்துகள் 93 சதவீதம் விலை குறைந்தும் பயனில்லை
-
உள்ளாட்சிகளில் 'ரேபிஸ்'தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு: பயன்படுத்தி கொள்ளகால்நடைத்துறை அழைப்பு
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் ( 30.10.2026 )
-
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு முடித்து வைப்பு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 27.1 சதவீதத்திலிருந்து 2.6 ஆக குறைந்தது!