பொய் குற்றச்சாட்டுக்களை கூறி முடக்க நினைக்கின்றனர் அமைச்சர் கீர்த்தனா பேட்டி
சிவகாசி: ‘‘பொய் குற்றச்சாட்டுக்களை கூறி எதிர்க்கட்சிகள் எங்களை முடக்க நினைக்கின்றனர் ,’’ என அமைச்சர் கீர்த்தனா கூறினார்.
சிவகாசியில் வெற்றி மகளிர் தொழில் மேம்பாட்டு திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது, வெற்றி மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தில் சுய தொழில் தொடங்க உள்ள பெண்கள் இத்திட்டத்தில் இணைய வேண்டும். என்னை பற்றி விமர்சனம் செய்தால் நான் முடங்கி வீட்டில் இருந்து விடுவேன் என நினைக்கின்றனர். என் மீது உள்ள பயம் காரணமாக தொடர்ந்து விமர்சனம் செய்கின்றனர். ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டு வந்துள்ளேன். தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை கூறி எதிர்கட்சிகள் எங்களை முடக்க நினைக்கின்றனர். மேலும் தமிழகத்தை பின்னோக்கி இழுத்து செல்கின்றன. இப்படி தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை செய்தனர். அவர் வெகுண்டு எழுந்து வந்தது போல் நாங்களும் வருவோம், இவ்வாறு அவர் கூறினார்.