100 நாள் வேலை கேட்டு மா.திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணராயபுரம்:பிள்ளபாளையம் பஞ்சாயத்தில், 100 நாள் வேலை வழங்கும் திட்டத்தில் வேலை வழங்க கோரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். பிள்ளபாளையம் பஞ்.,ல், உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 நாள் வேலை வழங்கும் திட்டத்தில், சரி வர வேலை வழங்காமல் காலம் தாழ்த்துகின்றனர். கடந்த, 7 மாதமாக வேலை இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கிருஷ்ணராயபுரம் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணகுமார் பேச்சுவார்த்தை நடத்தி, வேலை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பிள்ளபாளையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பழனியாண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாகி பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு