கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

குளித்தலை: குளித்தலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் சார்பில், 120 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

குளித்தலை தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரன், குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வினோதினி, திட்ட செயல்பாடுகள், தாய் சேய் பராமரிப்பு குறித்து பேசினார். குளித்தலை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தியாகராஜன், நகராட்சி கவுன்சிலர் பானு ஜாபருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக பணியாளர்கள், அங்கன்வாடி பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Advertisement