ரேஷன் அரிசி சேகரிக்கும் கும்பல்: மக்கள் பாதிப்பு

சாயல்குடி: சாயல்குடி, கடலாடி, சிக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கக்கூடிய ரேஷன் அரிசியை ஒரு சிலர் சட்டவிரோதமாக சேகரித்து அவற்றை விற்பனை செய்யும் போக்கு தொடர்கிறது.

ரேஷன் கார்டுகளில் குடும்ப அட்டைதாரர்களின் உறுப்பினர்களுக்கு ஏற்ப ரேஷன் அரிசி மாதம் ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது. பெரும்பாலானோர் கடைகளில் விற்கக்கூடிய அரிசியை பயன்படுத்தும் நிலையில் அவர்களுக்கான ரேஷன் அரிசியை கிலோ ரூ.10 வீதம் சேகரித்து அவற்றை மொத்தமாக வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் செயல் சத்தம் இல்லாமல் அரங்கேறி வருகிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது:

ரேஷன் கார்டுகளுக்கு முறையாக அரிசி வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். அவற்றை பயன்படுத்தாத நபர்களிடமிருந்து சேகரிக்கக் கூடிய அரிசி மொத்தமாக ஓரிடத்தில் மூடைகளாக கட்டி வைத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றனர்.

Advertisement