தீபாவளி பலகாரம் கடைகளில் வாங்க ஆசைப்படும் குடும்பத் தலைவிகள்
கீழக்கரை: திருப்புல்லாணி, கீழக்கரை, சிக்கல், கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமானோர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தின்பண்டங்கள் செய்வதில் அதிக முனைப்பு காட்டி வரும் நிலையில் தற்போது பேக்கரி மற்றும் குடிசைத் தொழிலாக செய்யக்கூடிய சிறு வணிக நிறுவனங்களில் மொத்தமாக ஆர்டர் செய்து அவற்றை பெற்று வருகின்றனர். குடும்பத் தலைவி ஒருவர் கூறியதாவது:
முன்பு ஆயுத பூஜையை முன்னிட்டு தீபாவளிக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் முறுக்கு, அதிரசம், சீடை, ரவா லட்டு, தட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான தின்பண்டங்களை தயாரிக்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தோம். தற்போது பெருவாரியான குடும்பங்களில் பேக்கரி மற்றும் சிறு குடிசை தொழில் செய்பவர்களிடமிருந்து மொத்தமாக தின்பண்டங்களை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதால் எளிதாக அமைகிறது.
தற்போது விற்கக்கூடிய விலைவாசியை மற்றும் கடின உழைப்பிற்கு ரெடிமேடாக கிடைக்கக்கூடிய பலகாரங்கள் தான் ஏற்றதாக அமைகிறது. இருப்பினும் தீபாவளி நேரத்தில் எண்ணெய் சட்டி மூலமாக வடை உள்ளிட்ட பலகாரங்களை சுடுகிறோம். காலத்தின் மாற்றத்தால் பெரும்பாலானோர் கடையில் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது என்றனர்.
மேலும்
-
உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் வெண்கலம் வென்ற ஓமலுார் மாணவி
-
நிலம் அளந்து தராமல் அலைக்கழிப்பு கண்களில் துணி கட்டி விவசாயி தர்ணா
-
சிவகாசியில் இரு பிரிவினர் மோதல் தடியடி நடத்திய போலீசார்
-
வாடிக்கையாளர் பணப் பாதுகாப்புக்கு வங்கிகளே பொறுப்பு!: 'டிஜிட்டல்' மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
அடுத்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்