சட்டம் ஒழுங்கு சீர்கேடை கண்டித்து தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து, நாமக்கல் தி.மு.க., மகளிர் மற்றும் தொண்டரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கட்சி துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆலோசனைப்படி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கவுரி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜோதிலட்சுமி வரவேற்றார். மாநில வலைதள பொறுப்பாளர் ரியா, ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா, திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் கோகிலாமணி பங்கேற்று பேசினார்.
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை; சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுள்ளது. விலைவாசி உயர்வால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, டவுன் பஞ்., மகளிர் மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement