சப்னா புக் ஹவுஸ் சார்பில் நவ., 1ல் புத்தக திருவிழா

பெங்களூரு: கன்னட ராஜ்யோத்சவாவை முன்னிட்டு, பெங்களூரு சப்னா புக் ஹவுஸ் சார்பில், புத்தக திருவிழா நடக்கிறது. விழாவில், ஒரு கன்னட புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.

சப்னா புக் ஹவுஸ் நிர்வாக இயக்குநர் நிதின் ஷா வெளியிட்டுள்ள அறிக்கை:

கன்னட பண்டிகை கொண்டாடுவது, புத்தகங்களை வெளியிடுவது, வாசகர்களுக்கு சலுகை விலையில் புத்தகங்கள் வழங்குவது என, பல சேவைகளை செய்கிறது.

இதுவரை, 9,000த்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை, சப்னா புக் ஹவுஸ் பிரசுரித்துள்ளது. பல முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை, மீண்டும் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் நவ., 1ல், கன்னட ராஜ்யோத்சவா நாளன்று, புத்தக திருவிழா நடத்துகிறது. அதே போன்று, இம்முறையும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. இதில் ஒரு கன்னட புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் ஒரு புத்தகம் வாங்கினால், மற்றொரு புத்தகம் இலவசமாகவும் வழங்கப்படும். மொத்தமாக புத்தகங்கள் வாங்கினால், சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.

சப்னா புக் ஹவுசில், நவம்பர் 1ம் தேதி, காலை 10:00 மணிக்கு புத்தக திருவிழா துவங்கும். புத்தக திருவிழாவை மூத்த நடிகர் தொட்டண்ணா, துவக்கி வைப்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement