வார இறுதி நாளில் தங்கம் விலை சரிவு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.3,720 குறைவு
-நமது நிருபர் -
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் திங்கள் கிழமை (அக்டோபர் 26) ஆபரண தங்கம் கிராம் 13,085 ரூபாய்க்கும், சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது; வெள்ளி விலை கிராம் 220 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
செவ்வாய் கிழமை (அக்டோபர் 27) ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 135 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
புதன் கிழமை (அக்டோபர் 28) ஆபரண தங்கத்தின் விலை 480 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 13,195 ரூபாய்க்கும் விற்பனை ஆனது; வெள்ளி விலை ஒரு கிராம் 220 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வியாழக்கிழமை (அக்டோபர் 29) தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராம் 13,195 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை இன்று மாற்றம் கண்டுள்ளது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 215 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரம்
நேற்று(அக்டோபர் 30) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 155 ரூபாய் அதிகரித்து 13,040 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 210 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இன்று (அக்டோபர் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 310 ரூபாய் குறைந்து 12 ஆயிரத்து 730 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3,720 ரூபாய் சரிந்துள்ளது.
வெள்ளியும் சரிவு
வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து 200 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
பிரத்யேக வீடியோ!
தங்கம் விலை கடும் சரிவு; ரூ.1 லட்சத்துக்கு வருமா ஒரு சவரன்?
இன்றைய தங்கம் விலை நிலவரத்தை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (1)
rajlarn - ,
31 அக்,2026 - 11:35 Report Abuse
இன்னும் அதிகமாக தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது 0
0
Reply
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு
Advertisement
Advertisement