பெரும் சிக்கலில் ஈரான்; வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை; அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு அவசரம் இல்லை. அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் ஆர்வமாக உள்ளது; கடுமையான உள்நாட்டுத் தடைகளை எதிர்கொள்கிறது. ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஈரான் தங்கள் வீரர்களுக்குச் சம்பளம் கொடுக்கவில்லை, காவலர்களுக்கும் சம்பளம் கொடுக்கவில்லை. அவர்கள் பெரும் சிக்கலில் இருக்கிறார்கள். இது ஒரு வழக்கமான போர் அல்ல; இந்தப் போருக்கான அமெரிக்காவின் நிதிச் செலவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஈரான் செய்யும் செலவுடன் ஒப்பீட்டு பாரத்தால் நாங்கள் மிகக் குறைவான பணத்தையே செலவிடுகிறோம்.

நாங்கள் செலவழித்த பணத்தை விட, வெனிசுலாவிடம் இருந்து பத்து மடங்குக்கு மேல் பணம் வருவாய் ஈட்டி ஈடுசெய்துவிட்டோம். ஈரானுக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம்; பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுக்கு போதுமான நேரம் இருக்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Advertisement