போலீஸ் பயன்பாட்டிற்கு பழைய வாகனம் காலாவதி வாகனங்களால் பணியில் தொய்வு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் போலீஸ் வாகனங்கள் மிகவும் பழைய வாகனங்களாக இருப்பதால் வழியில் ஆங்காங்கே நின்று விடுகிறது. இதனால் குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதில் சிரமம் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி உள்ளிட்ட

மாவட்டத்தின்

பல்வேறு பகுதிகளில் சில வாரங்களாக தொடர் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மாவட்டத்தில்

போலீஸ் ஸ்டேஷன்களுக்கு நீண்ட வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட ஜீப்களே தற்போது வரை வழக்கு விசாரணை, ரோந்துபணி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைத் தேடிப் பிடிப்பது மற்றும் அவசரப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் காலாவதி தேதி முடிவடைந்த பிறகு மீண்டும் அதனை புதுப்பித்து பயன்படுத்தி வருகின்றனர்.

போலீசார் கூறியதாவது: காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஜீப்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டவை. தற்போது அவை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. அவ்வப்போது பழுது

நீக்கி பயன்படுத்தி வந்தாலும், பணிக்கு

செல்லும் வழியிலேயே திடீரென நின்று விடுகின்றன. அவசரமாகச் செல்ல

வேண்டிய நேரங்களில் என்ன செய்வது

என்று தெரியாமல் தவிக்கிறோம். குறிப்பாக, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் நவீன டூவீலர் மற்றும் நான்கு சக்கர

வாகனங்களில் வேகமாகத் தப்பிச் செல்லும்போது, எங்களிடம் உள்ள பழைய ஜீப்களால் அவர்களை

பிடிப்பது சிரமமாக உள்ளது. சில நேரங்களில் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் கூட

வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ரோந்து பணி மற்றும் அவசர

அழைப்புகளுக்குச் செல்லும்போது வாகனங்கள் வழியில் பழுதாகி நிற்பதால் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

எனவே, சிவகங்கை மாவட்டத்தில்

அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் பயன்பாட்டில் இருக்கும்

பழைய, அடிக்கடி பழுதாகும் வாகனங்களை மாற்றிவிட்டு புதிய நவீன ரக ஜீப்

வழங்க உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement