மானாமதுரையில் பாலாபிஷேகம்

மானாமதுரை: ஏ. விளாக்குளம் கிராமத்தினர் ஊர்வலமாக பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியே வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். சிறுவர்கள் முத்துராமலிங்கத் தேவர், மருது பாண்டியர்,வேலு நாச்சியார், நேதாஜி உள்ளிட்ட தலைவர்கள் வேடமணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக கீழமேல்குடி, கிளங்காட்டூர் கிராமங்களை சேர்ந்தவர்களும் பால்குடம் எடுத்து வந்து சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். சிலம்பாட்டம், ஒயிலாட்டம் நடைபெற்றது.

Advertisement