போக்சோவில் வாலிபருக்குபத்து ஆண்டுகள் சிறை

தேனி: உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி 2025ல் வீட்டில் இருந்தார். சிறுமியிடம் கார்திக் 20, காதலிப்பதாக கூறி தெரிந்த இடத்தில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் புகாரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்தனர். வழக்கு தேனி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் நீதிபதி எழில் இன்று (அக்.,30) தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கார்த்திக்கிற்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு இழப்பீடாக சிறுமிக்கு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

Advertisement