வாடகை செலுத்தாமல் ‘ டிமிக்கி’ 19 கடைக்கு அதிரடியாக‘ சீல்’
குன்னூர்: குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத, 19 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
குன்னூர் நகராட்சியில் வாடகை, நிலுவை தொகை செலுத்தாத காரணத்தால், மார்க்கெட்டில் உள்ள, 19 கடைகளுக்கு நேற்று (அக்.,31) நள்ளிரவு நகராட்சி வருவாய் பிரிவினர் 'சீல்' வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.
தீபாவளி நெருங்கும் நிலையில் திடீரென ‘சீல்’ வைத்ததால் வியாபாரிகள் அப்செட் ஆகி உள்ளனர்.
வியாபாரிகள் கூறுகையில், நகராட்சி மற்றும் பேரூராட்சி விதிகளின்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளின் வாடகையை, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே,15 சதவீதம் உயர்த்த வேண்டும். ஆண்டுதோறும் தனித்தனியாக உயர்த்த நகராட்சி விதிகளில் இடமில்லாத நிலையில், ஆண்டு தோறும், 5 சதவீதம் வாடகை உயர்த்தப்பட்டு கூடுதல் சுமை தந்து தீபாவளி நேரத்தில் ‘சீல்’ வைக்கின்றனர், என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜெர்மனியில் முன்னணி நிறுவன தலைவர்களுடன் சந்திப்பு; முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா பேச்சு
-
முரசு புயல் எதிரொலி: உஷார் நிலையில் ஆந்திரா; 19 விமானங்கள் ரத்து
-
பொதுச்சொத்துகளை ஆக்கிரமித்து இயங்கும் மசூதி, சர்ச்சுகளுக்கு பட்டா வழங்குவதா? த.வெ.க., அரசுக்கு பா.ஜ., ஹிந்து முன்னணி கண்டனம்
-
ராகுல் பொதுக்கூட்டத்தால் டில்லி வியாபாரிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நஷ்டம்
-
ராமாயணம் -1 படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு : முன்பதிவில் ரூ.46 கோடி குவித்து சாதனை
-
தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தல்? அறிக்கை அளிக்க உத்தரவு
Advertisement
Advertisement