மாவட்டத்தில் 300 விலையில்லா பசு மாடுகள் வழங்க ஏற்பாடு
கம்பம்: முதற்கட்டமாக மாவட்டத்தில் 300 விலையில்லா பசுமாடுகள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கால்நடைபராமரிப்புத்துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஆண்டு தோறும் விலையில்லா ஆடுகள், பசுக்கள் வழங்கும் திட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 10 ஆயிம் பசுமாடுகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் பயனடையலாம். இவர்களுக்கு 5 ஆடுகள் அல்லது ஒரு பசு வழங்கப்படும். நடப்பு ஆண்டில் ஒரு பசு ரூ. 57 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தேனி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 300 பசுக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பசுக்கள் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள பயனாளிகளக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement