உ.பி.,யில் பாஜ ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது; அமித் ஷா
லக்னோ: உத்தரப் பிரதேச மாநில பாஜ செயற்குட்டுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது, பூத் மட்டத்தில் அமைப்பை வலுப்படுத்துதல், புதிய வாக்காளர்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை அதிகரித்தல் போன்ற அறிவுரைகளை கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது; ராமாயணத்தில் வரும் 'அங்கதன் கால்' போன்று உத்தரபிரதேசத்தில் பாஜ அரசு காலை பலமாக ஊன்றியுள்ளது. யாராலும் அசைக்க முடியாது. மாநிலத்தில் பாஜ தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி. நாங்கள் ராமர் கோயிலைக் கட்டினோம். சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டபோது, தனது ஆட்சியைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டவர் தான் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்.
தோற்ற பிறகு நடுவர் மீது பழிபோடும் அணியாக எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. பார்லியில் இது குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு புள்ளிக்கும் பதிலளிக்க பாஜ தயாராக இருக்கிறது. இவ்வாறு கூறினார்.
மேலும்
-
யமுனை நதி நீர் சுத்தம்; குடித்துக்காட்டிய எம்.பி.,
-
குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இல்லை வெளிநடப்பு செய்த தர்மபுரி விவசாயிகள்
-
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் தீபாவளி கொண்டாட்டம்
-
விலைவாசி உயர்வு உச்சம், ஹிட்லர் ஆட்சி இதுதான் த.வெ.க., அரசின் சாதனை: முனுசாமி
-
கறவை மாடு திருடியவருக்கு போலீசார் வலை
-
கள்ளக்காதல் பிரச்னையால் முன்விரோதம் வியாபாரி கொலையில் 5 பேருக்கு காப்பு