வலிமை பெறும் கடற்படை; ரூ.40,000 கோடியில் 8 அதி நவீன போர்க்கப்பல்கள் உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
இந்திய கடற்படையின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ரூ.40,000 கோடி மதிப்பீட்டில் அடுத்த தலைமுறைக்கான 8 போர்க்கப்பல்களை வாங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்து இருக்கிறது.
ஒவ்வொரு போர்க்கப்பலும். 2000 டன் எடை, மணிக்கு 30 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஒப்பந்தம் கையெழுத்தானதால், 2030ம் ஆண்டுக்குள் எட்டு கப்பல்களில் ஒன்றை கடற்படை பெறும் என்று தெரிகிறது. ஒப்பந்த காலக்கெடுவை விரைபடுத்தி, கப்பல்களை குறித்த காலத்திற்கு முன்பே பெறும் வழிகள் குறித்தும் கப்பற்படை ஆலோசித்து வருகிறது.
அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள், கண்காணிப்பு, தேடுதல், தாக்குதல் நடவடிக்கைகள், கடலோர பாதுகாப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் பன்முகத்தன்மை கொண்டவையாக இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.
கப்பல்களை வடிவமைக்கும் ஒப்பந்தங்கள், கோல்கட்டாவைச் சேர்ந்த கார்ட்ன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் கோவா ஷிப்யார்டு லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் அதிகாரப்பூர்வமாக வரும் நாட்களில் கையெழுத்தாக இருக்கிறது.
மேலும்
-
உத்தராகண்டில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
-
பிலிப்ஸ் - பிரேஸ்வெல் அதிரடி ஆட்டம்; இந்தியாவுக்கு 260 ரன் இலக்காக நிர்ணயம்
-
தமிழகத்தில் லேசான மழை தொடரும்; நவம்பர் 2ல் நீலகிரிக்கு கனமழைக்கு வாய்ப்பு
-
உ.பி.,யில் பாஜ ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது; அமித் ஷா
-
கைது நடவடிக்கையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை; அமைச்சர் ரமேஷ்
-
தமிழக தலைமை தகவல் ஆணையர் நியமனம்