ஜி.ஹெச்.,க்கு சலவை இயந்திரம் ராசி சீட்ஸ் நிறுவனம் வழங்கல்

ஆத்துார்: ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு, ஆத்துார் ராசி சீட்ஸ் நிறுவனம் சார்பில், 47.25 லட்சம் ரூபாய் மதிப்பில் சலவை இயந்திரம் மற்றும் மருத்துவமனை கட்டட புதுப்பிப்பு பணிக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை, ராசி சீட்ஸ் நிறுவன தலைவர் ராமசாமி திறந்து வைத்தார். நவீன சலவை இயந்திரத்தை, அ.தி.மு.க.,வின், ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் திறந்து வைத்தார்.இதில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் நந்தினி, ஆத்துார் மருத்துவ அலுவலர் ஜெயலட்சுமி, ஆர்த்தோ மருத்துவர் கிருபாசங்கர், சேவை சங்க பிரதிநிதிகள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement