ஸ்ரீனிவாச பெருமாளுக்கு புஷ்பாபிஷேக வைபவம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், பிராமண புரோகிதர் அர்ச்சகர் சங்கம் சார்பில், ஸ்ரீனிவாச பெருமாள் சுவாமிக்கு, புஷ்பாபிஷேகம் வைபவம் நேற்று காலை நடந்தது.

இதில், மஹா கணபதி பூஜை, நவக்கிரஹ பூஜை, லட்சுமி குபேர ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், புத்திரபாக்கியம், படிப்பு, மன அமைதி, எதிர்மறை ஆற்றல் முற்றிலும் நீங்க, மஹா பூர்ணாஹூதி ஆகியவை நடந்தைது.
காலை, 9:00 மணிக்கு, மஹா அபிஷேகமும், பூக்கூடை ஊர்வலமும் நடந்தது. 11:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச சுவாமிக்கு, ஒரு டன் மலர்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement