விபத்தில் ஆர்.ஐ., பலி: காப்பீடு ரூ.1 கோடி வழங்கல்
சிவகங்கை: சிவகங்கை விபத்தில் உயிரிழந்த வருவாய் ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இளையான்குடி தாலுகா தாயமங்கலம் வருவாய் ஆய்வாளராக சேகர் பணிபுரிந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார். சிவகங்கை ஸ்டேட் வங்கி கிளையில் இவரது சம்பள கணக்கில் மாதந்தோறும் தனி நபர் விபத்து காப்பீட்டிற்கான பிரீமிய தொகை பிடிக்கப்பட்டு வந்தது. விபத்தில் உயிரிழந்த சேகரின் மனைவியிடம் தனி நபர் விபத்து காப்பீட்டு தொகை ரூ.1 கோடிக்கான காசோலையை திருச்சி மண்டல துணை பொது மேலாளர் சந்தீப்த குமார் நாயக் வழங்கினார். காரைக்குடி மண்டல மேலாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், திருச்சி உதவி பொது மேலாளர் பழனிசங்கர் உடனிருந்தனர். சிவகங்கை ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் கென்னடி, காப்பீட்டு தொகை கிடைக்க அனைத்து நடவடிக்கையையும் மேற்கொண்டார். //
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யமுனை நதி நீர் சுத்தம்; குடித்துக்காட்டிய எம்.பி.,
-
குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இல்லை வெளிநடப்பு செய்த தர்மபுரி விவசாயிகள்
-
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் தீபாவளி கொண்டாட்டம்
-
விலைவாசி உயர்வு உச்சம், ஹிட்லர் ஆட்சி இதுதான் த.வெ.க., அரசின் சாதனை: முனுசாமி
-
கறவை மாடு திருடியவருக்கு போலீசார் வலை
-
கள்ளக்காதல் பிரச்னையால் முன்விரோதம் வியாபாரி கொலையில் 5 பேருக்கு காப்பு
Advertisement
Advertisement