இலவச மனைப்பட்டா கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
பரங்கிப்பேட்டை: இலவச மனைப்பாட்டா கேட்டு புவனகிரி தாலூகா அலுவலகம் முன் மா.கம்யூ., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரங்கிப்பேட்டை ஒன்றியம் சின்னக்குமட்டி , பெரிய குமட்டி, தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை, ஆதிவராகநல்லூர், வல்லம் உட்பட 9 கிராமங்களை சேர்ந்த ஏழை மக்களுக்கு இலவச மனைப் பட்டா கேட்டு மா.கம்யூ., சார்பில் புவனகிரி தாலூகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு ரமேஷ் பாபு தலைமை தாங்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றியக்குழு ஜெயசீலன், அசன்முகமது உட்பட 9 கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தாசில்தார் ஷானாசிடம், பொதுமக்கள் இலவச மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement