2,880 திட்டப்பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: தமிழக முதல்வரின் ஒருங்கிணைந்த நகர வளர்ச்சி இயக்க திட்டத்தின், பல்வேறு பேரூராட்சிகளில், மண் சாலையை தார் சாலையாக மாற்றுதல், சீரமைத்தல் உள்ளிட்ட, 687 வளர்ச்சி திட்டப் பணிகள் செயல் படுத்தப்பட உள்ளன.

இதற்கு, 84.49 கோடி ரூபாய்க்கு, நிர்வாக அனுமதி வழங்கி, நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதே திட்டத்தின் கீழ், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில், 1,513 வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு, 154.05 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், 680 வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு, 138.11 கோடி ரூபாயில், பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மொத்தமாக, 2,880 பணிகளுக்கு, 376.65 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளித்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி அரசாணை வெளியிட்டு உள்ளார்.

Advertisement