617 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
நாமக்கல்:'கொல்லிமலையில், 617 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கொல்லிமலை சுற்றுலாத்தலம் சார்ந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கண்காணித்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஊரக வளர்ச்சித்துறை, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம், கொல்லிமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம பஞ்.,களிலும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 617 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராத தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதனால், கொல்லிமலைக்கு வரும் பொதுமக்கள், மேற்காணும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.