சிறையில் பாதுகாப்பு குளறுபடிக்கு என்ன காரணம்? வெளியானது புதிய தகவல்
மதுரை: தமிழகத்தில் 3 மாவட்ட சிறைகள் தவிர, மற்ற மாவட்ட சிறைகளில் கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் தேவை இல்லை என சரண்டர் செய்யப்பட்டதே கைதிகள் தப்பிச்செல்வது, தடை செய்யப்பட்ட பொருட்கள் ஊடுருவ காரணமாகின்றன என புகார் எழுந்துள்ளது.
தேனி தேக்கம்பட்டி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தால், மதுரை மத்திய சிறை காவலர்களின் பணி நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவலர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அரசாணைப்படி 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும். ஆனால் மதுரை சிறை டி.ஐ.ஜி.,யும், கண்காணிப்பாளரும் தன்னிச்சையாக 12 மணி நேரம் வேலை வாங்குவதாக காவலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: யாரோ செய்த தவறுக்காக எங்களை பழிவாங்குவதில் என்ன நியாயம். மனஉளைச்சல் அதிகரித்தால் பணியில் கவனம் சிதறும். அது சிறை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். மாவட்ட சிறைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படாமல் உள்ளது.
தற்போது தேனி, விழுப்புரம், தர்மபுரி சிறைகளில் மட்டுமே கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடம் உள்ளது. மற்ற சிறைகளில் முன்பு இருந்தது. ஆனால் அதற்கான பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படாததால் 2019ல் 'தேவை இல்லை' என அரசிடம் சரண்டர் செய்யப்பட்டு, அதற்கு பதில் ஜெயிலர்கள் நியமிக்கப்பட்டனர். ஜெயிலர் ஒவ்வொரு முறையும் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் கேட்க வேண்டியிருக்கிறது. இதனால் சிறை பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
தேனி சிறையில் 3 உதவி சிறை அலுவலர்கள் பணியில் இருந்தும் அவர்களில் ஒருவரை இரவு அதிகாரியாக நியமிக்காதது யாருடைய தவறு. சிறைவிதிப்படி உதவி சிறை அலுவலரே புதிய கைதிகளை சிறைக்குள் அனுமதிக்க முடியும். அந்த இடத்தில் தலைமை காவலரை இரவு அதிகாரியாக நியமித்தது யார். இதற்கெல்லாம் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சிறைத்துறையை சீர்த்திருத்த வேண்டும்; எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனக்கருதிய டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோரை இடமாற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எங்களுக்கு மீண்டும் 8 மணி நேர வேலை வழங்க வேண்டும். மாவட்ட சிறைகளில் மீண்டும் கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து (8)
Mani . V - Singapore,இந்தியா
01 நவ,2026 - 04:45 Report Abuse
ஒரு குளறுபடியும் இல்லை. ஊழல் செய்து உண்டு கொழுத்த அதிகாரிகளை, இது போன்ற தவறுகள் நடந்தால் என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவோம் என்று சொல்லுங்கள் பார்ப்போம். அப்புறம் ஒரு கைதியும் தப்ப வைக்கப்பட மாட்டான். அவன்களுக்கு போதை பொருட்கள் சப்ளையும் நடக்காது. 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
31 அக்,2026 - 18:20 Report Abuse
சிறைக்காவலர் குறைவாக இருப்பதால் சிறையில் கலவரம் நடக்க வாய்ப்பு? 0
0
Reply
V Narayanan - ,இந்தியா
31 அக்,2026 - 13:36 Report Abuse
காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் .காவல்நிலையம் எல்லாம் காவலர்கள் குறைவால் வேலை அதிகம் ஆகிறது .ஆண்ட கோபத்தில் குற்றவாளிகள் அடி வாங்குவார்கள் . 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
31 அக்,2026 - 08:16 Report Abuse
உயர் அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும். அவர்கள்தான் பொறுப்பு 0
0
சாமி - ,
31 அக்,2026 - 13:25Report Abuse
ஆமாம்,ஆமாம் டிஸ்மிஸ் நடவடிக்கை துறை அமைச்சர் வரை 0
0
Reply
Krishna - bangalore,இந்தியா
31 அக்,2026 - 07:40 Report Abuse
Sack& Punish CaseNewsVotePower Hungry SelfSaint MAFIA Gangs incl Vested False ComplaintGangs Cooking False Cases. Jails& Crowding Will Reduce Automatically 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement