எல்பிஜி, டேங்கர் சங்க தலைவர் மீது குற்றச்சாட்டு: உறுப்பினர்கள் முற்றுகை
நாமக்கல்:நாமக்கல்லில்
உள்ள தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் மீது
குற்றம்சாட்டி, சங்க உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது.
தென்மண்டல எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரி
உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு
வருகிறது. இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான, 4,500க்கும்
மேற்பட்ட புல்லட் காஸ் டேங்கர் லாரிகள், இந்தியா முழுவதும், மத்திய
அரசுக்கு சொந்தமான ஐ.ஓ.சி., - பி.பி.சி., - எச்.பி.சி., ஆகிய ஆயில்
நிறுவனங்களுக்கு, கான்ட்ராக்ட் அடிப்படையில் இயக்கப்பட்டு
வருகிறது. சங்க தலைவராக சுந்தர்ராஜன் உள்ளார்.
இவர், சங்க
உறுப்பினர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், பல மாதமாக
சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என
உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், கூட்டத்தை நடத்தவில்லை
என கூறப்படுகிறது.
இதனால், சங்க உறுப்பினர்கள், 100க்கும்
மேற்பட்டோர், நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள சங்க அலுவலகம் முன்,
நேற்று திரண்டனர். அப்போது, அங்கு வந்த சங்க தலைவர் சுந்தர்ராஜனை
சூழ்ந்துகொண்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சரமாரி
கேள்வி எழுப்பினர். மேலும், சங்க உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தை
முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு
பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
மயான எரியூட்டும் கட்டடம் சேதம்: சீரமைக்க கோரிக்கை
-
மாவட்டத்தில் 300 விலையில்லா பசு மாடுகள் வழங்க ஏற்பாடு
-
கூடலுார் வழியாக ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு! குற்ற புலனாய்வு அலுவலகம் திறக்கப்படுமா?
-
வாடகை செலுத்தாமல் ‘ டிமிக்கி’ 19 கடைக்கு அதிரடியாக‘ சீல்’
-
இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்: இந்திய அணி 191 ரன்
-
திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு