பாழடைந்தது தொட்டி பயமுறுத்துது கிணறு

அலங்காநல்லுார்: பி.மேட்டுப்பட்டியில் பாழடைந்த தொட்டி, கிணற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்குள்ள சர்க்கரை ஆலை அருகே அலங்காநல்லுார் மெயின் ரோட்டோரம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதனருகே முன்பு ஊராட்சியின் குடிநீர் ஆதாரமாக இருந்த கிணறும் உள்ளது. தொட்டியின் பல இடங்களில் விரிசல் விழுந்துள்ளது.

பல இடங்களில் காரை பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. இதன் கீழ்பகுதியில் உள்ள அறை சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்புள்ளது. கிணறு இருப்பதே தெரியாதவாறு செடி, கொடிகள் அடர்ந்துள்ளன. கிணற்றின் பக்கவாட்டு சுவர்களும் ஆபத்தான நிலையிலுள்ளன. இவ்வழியில் செல்வோர் உள்ளே விழவும் வாய்ப்புள்ளது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement