ஆந்திராவுக்கு முதலீடுகள் டேக் டைவர்சன்; விஜய் படத்தை கூறி பழனிசாமி விமர்சனம்

3

சென்னை: 'விஜய் நடித்த 'திருமலை' படத்தில் வருவது போல், தமிழகத்துக்கு வரும் முதலீடுகளை, ஆந்திராவுக்கு, த.வெ.க., அரசு 'டேக் டைவர்சன்' செய்கிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்து உள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தின் அக்டோபர் மாத ஜி.எஸ்.டி., வருவாய், வெறும் 3 சதவீதமாக, தேசிய சராசரியை விட மிகக்குறைவாக உள்ளது. தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், ஆந்திரா சென்று கொண்டிருக்கின்றன. தற்போது, மூன்று தென்கொரிய நிறுவனங்களின், 1,614 கோடி ரூபாய் முதலீடு, ஆந்திரா சென்றுள்ளது.

முதல்வர் விஜய் நடித்த, 'திருமலை' படத்தில், 'டேக் டைவர்சன்' என, கூறி, திருப்பதியில், நடிகர் விவேக்கை, விஜய் இறக்கி விடுவதை போல், தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில்களை எல்லாம், 'டேக் டைவர்சன்' என, ஆந்திராவிற்கு, த.வெ.க., அரசு தாரை வார்க்கிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை அறிக்கை



'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், 'கடந்த ஆறு மாதங்களாக, தமிழக ஜி.எஸ்.டி., வருவாய், தமிழக பொருளாதார நிலை, த.வெ.க., அரசின் நிதி முன்னுரிமை, நிலையான வருவாயை உருவாக்குவதில் அரசின் அணுகுமுறை ஆகியவை குறித்து, பல முக்கிய கேள்விகள் எழுகின்றன.

'கடந்த பல மாதங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த, ஜி.எஸ்.டி., வருவாய், அக்டோபர் மாதத்தில் ஓரளவு வளர்ச்சியை பதிவு செய்திருப்பது மட்டுமே சிறிய ஆறுதல்' என தெரிவித்துள்ளார்.

Advertisement